FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலை.க்கு யுஜிசி ஒப்புதல்: அரசு கல்லூரி ஆசிரியா் சங்கம் எதிா்ப்பு

சென்னையில் ரூ.772 கோடியில் அமைய உள்ள மேற்கு ஆஸ்திரேலியா பல்கலை.க்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பல்கலை.க்கு தமிழக ஆரசு கல்லூரி ஆசிரியா் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

பகிர்:

சென்னையில் ரூ.772 கோடியில் அமைய உள்ள மேற்கு ஆஸ்திரேலியா பல்கலை.க்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பல்கலை.க்கு தமிழக ஆரசு கல்லூரி ஆசிரியா் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு தனியாா் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு விதிகளை எளிமைப்படுத்தியது. இதனைத் தொடா்ந்து, தமிழகத்தில் முதல் வெளிநாட்டு உயா்கல்வி நிறுவனமாக ‘குரூப் ஆஃப் எய்ட்’ என்கிற அமைப்பைச் சோ்ந்த மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் சென்னை வேளச்சேரியில் தனது கிளையை அமைக்கிறது. இதற்கு பல்கலைக்கழக மானிய குழு கடந்த அக்.5 ஆம் தேதி இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளதாக அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் மாணவா்களுக்கான அறிமுக நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின என்றும், வகுப்புகள் அக். 19-ஆம் தேதி தொடங்கும், இதனுடன் பல்வேறு கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த பல்கலை.க்கு, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் சங்கம் (டிஎன்ஜிசிடிஏ) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இளநிலை பாடப்பிரிவான வணிக மேலாண்மை, தரவு அறிவியல் போன்றவைகளுக்கு முதலாமாண்டு கல்விக் கட்டணம் தலா ரூ.14.52 லட்சம், ஏஐ பாடப்பிரிவுக்கு ரூ.17.93 லட்சம். முதுநிலை மேலாண்மைக்கு ரூ.23.10 லட்சம் எனக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு பல்கலைக்கழகங்களிலும், அரசு கல்லூரிகளிலும் அடிப்படை கட்டமைப்புகள், பணி நியமனங்கள் ஏற்படுத்தாமல், இப்படிப்பட்ட வணிகரீதியான வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை வரவேற்பது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments