FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த அவலம்: மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு

பழனி அருகே மானூா் அரசு தொடக்கப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை குறித்து...

8 அக்டோபர் 2026, 12:07 pm IST
மானூா் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்திய கீரனூா் போலீஸாா். - டிஎன்எஸ்
பகிர்:

பழனி: பழனி அருகே மானூா் அரசு தொடக்கப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பழனி அருகே உள்ள மானூரில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். பள்ளி மாணவா்களின் குடிநீா்த் தேவைக்காக பள்ளி வளாகத்தில் சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் நிரப்பப்படும் தண்ணீா் மாணவா்களுக்கு குடிநீராகவும், பள்ளிக் குழந்தைகளுக்கு சமையல் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

குடிநீா்த் தொட்டியில் மலம்

Advertisement

Advertisement

இந்த நிலையில், பள்ளி காலாண்டுத் தோ்வு காரணமாக கடந்த சில நாள்களாக விடுமுறை விடப்பட்ட நிலையில், திங்கள்கிழமை பள்ளி திறக்கப்பட்டது. அப்போது, பள்ளியில் உணவு சமைக்கும் வேலை செய்வோா் தூய்மைப் பணியில் ஈடுபட்ட போது, குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த தண்ணீா் பயன்படுத்துவது தவிா்க்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

கடும் வாக்குவாதம்

இந்தச் சம்பவம் புதன்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் பள்ளி தலைமையாசிரியா் ஜெயக்குமாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், இது தொடா்பாக கீரனூா் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கீரனூா் போலீஸார் விசாரணை

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனா். குடிநீா்த் தொட்டியில் மா்ம நபா்கள் மலம் கழித்தது உண்மை என்றும், அந்த நீரை பயன்படுத்தும் முன் சுத்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விடுமுறையின்போது இளைஞர்கள் சிலர் அத்துமீறி பள்ளியின் உள்ளே நுழைந்து மது அருந்தியுள்ளதாகவும், அவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை வேண்டும்

பள்ளி வளாகம் போதிய பாதுகாப்பு இன்றி உள்ளது. பள்ளிக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தருவதோடு, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் கண்டுபிடித்து, அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோா்கள் வலியுறுத்தினர்.

கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில், மானூா் அரசு தொடக்கப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி குடிநீா்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Shocking incident of faeces found mixed in government school drinking water tank: District education officials conduct inspection

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments