FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

யுபிஐ வரிக்கு எதிராக கோவையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்!

யுபிஐ வரிக்கு எதிராக வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் பற்றி..

9 அக்டோபர் 2026, 1:49 pm IST
வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
பகிர்:

கோவையில் வியாபாரிகளை பாதிக்கும் வகையில் ஆன்லைன் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கும் முறையை கைவிடக் கோரி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.கோவை மண்டலத் தலைவர் சுதர்சன், மாநில துணைத்தலைவர்கள் தங்கசாமி, திருவேல்முருகன், மாநில செயலாளர் வேதநாயகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், யுபிஐ மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வியாபாரிகளும் பாதிக்கப்படக்கூடும் என வலியுறுத்தப்பட்டது.

வணிகர்களின் நலன் மற்றும் வணிகச் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, யுபிஐ பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், வணிகர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெபத்துரை தலைமையில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும், மேற்கு மாவட்டத் தலைவர் ஜெயமுருகன் தலைமையில் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், வடக்கு மாவட்டத் தலைவர் கிஷோர் தலைமையில் வடக்கு மாவட்ட நிர்வாகிகளும், தெற்கு மாவட்டத் தலைவர் சேர்மகன் தலைமையில் தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆத்திச்செல்வன் தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமான வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் மூலம் வணிகர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments