FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லியில் அரங்கேறும் காட்சிகள்... வலி நிறைந்த நினைவுகளை கண்முன் நிறுத்துகிறது: மு.க.ஸ்டாலின்

தில்லியில் அரங்கேறும் காட்சிகள்... ஏமர்ஜென்சி கால வலி நிறைந்த நினைவுகளை கண்முன் நிறுத்துகிறது என ஸ்டாலின் கூறியது...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - எக்ஸ்
பகிர்:

தில்லியில் அரங்கேறும் காட்சிகள்... ஏமர்ஜென்சி கால வலி நிறைந்த நினைவுகளை கண்முன் நிறுத்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை 'எக்ஸ்' பக்க பதிவில் கூறியிருப்பதாவது:

இன்று தில்லியில் அரங்கேறி வரும் நிகழ்வுகளும், அமைதிவழியில் போராடுபவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளும், நான் அனுபவித்த நெருக்கடிநிலைக் காலத்தின் வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவருகின்றன.

Advertisement

Advertisement

தில்லியிலும் நாடு முழுவதிலும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், மாணவர்கள், போராடும் இளைஞர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்

தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது, பாஜகவின் கிளையாகச் செயல்பட்டுக்கொண்டு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிடும் தவெக அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

ஜனநாயகத்தையே அழித்துவிடும்

அமைதிவழியில் போராடுவதற்கான தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது குற்றமல்ல. ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும்.

சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை. அவர் பதவி விலகுவதோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

summary

bring back painful memories of the Emergency that I lived through....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments