FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

மதுரை, கோவை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என முதல்வர் விஜய் பேச்சு...

11 அக்டோபர் 2026, 4:23 pm IST
பிரதமர் நரேந்திர மோடியுடம் முதல்வர் விஜய் - டிஐபிஆர்
பகிர்:

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதனால் உருவாகும் பலன் மக்களுக்கு கூடுதல் நலன்களை வழங்கும் என முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (அக். 11) தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) தொடக்கி வைத்தார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:

Advertisement

Advertisement

2036 ஆம் ஆண்டில் 1.5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு வளரும். அதற்காக பல்வேறு திட்டங்களை அரசு தீட்டி வருகிறது. உள்கட்டமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இளைஞர்கள் நம் மிகப்பெரிய பலம். அவர்களின் திறமையை உலக அளவிலான நகர்வில் இணைப்பதே நமது இலக்கு.

தொன்மையான மொழியைக்கொண்ட தமிழ்நாடு சிறப்பான வரலாறு, கட்டடக்கலை, பண்புகளால் தனித்துவம் பெற்றுள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை தத்துவத்தின் அடிப்படையில் அனைவரையும் ஒருங்கிணைத்த வளர்ச்சியை இலக்காகக்கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.

தொழில், அறிவியல், இலக்கியம், சமூகநீதி ஆகியவற்றில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை தமிழ்நாடு அளித்து வருகிறது.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் மக்களிடம் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறையாக உள்ளது.

வளர்ச்சியை நோக்கி வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

வளர்ச்சியின் பயன் சென்னையை தாண்டி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றடைய வேண்டும் என செயல்பட்டு வருகிறோம் என முதல்வர் பேசினார்.

summary

Central and State governments must work together: Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments