சென்னையைப் போன்று தமிழகம் முழுக்க வளர்ச்சி தேவை: முதல்வர் விஜய்
மத்திய - மாநில அரசும் இணைந்து செயல்படும்போது உருவாகும் பலன் மக்களுக்கு கூடுதல் நலன்களை வழங்கும் என முதல்வர் பேச்சு.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) தொடக்கி வைத்தார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
''மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதனால் உருவாகும் பலன் மக்களுக்கு கூடுதல் நலன்களை வழங்கும்.
Advertisement
Advertisement
சென்னையப் போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும். அதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும். சென்னை - திருச்சி, திருச்சி - கரூர், கரூர் - கோவை 6 வழிச் சாலையை மேம்படுத்த வேண்டும்
செங்கல்பட்டு - திருச்சி இடையே 6 வழிச் சாலை அவசியம். தமிழ்நாட்டுக்கான நிலுவை நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.
சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் ரூ. 5110 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும்.
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்'' எனப் பேசினார்.
Development across Tamil Nadu is needed, just like in Chennai: Chief Minister Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.