FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: மு.வீரபாண்டியன்

மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

12 அக்டோபர் 2026, 4:10 am IST
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப்படம்
பகிர்:

மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்துள்ளாா்.

இந்தத் திட்டத்தை கொண்டுவர முந்தைய அரசும், புதிய அரசும், தமிழ்நாடு மக்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். புதிய திட்டம் மக்களின் போக்குவரத்துக்கு பேருதவியாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் மதுரை, கோவை நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மெட்ரோ ரயில் கொள்கையின் குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டி கோவை , மதுரை நகரங்களில் மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆக்ரா, போபால், பாட்னா போன்ற மாநகரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமா் மோடி, உடனடியாக கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments