மதுகுடிக்க பணம் தர மறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!
குடிபோதையில் மனைவியை தாக்கிய கணவனின் கொடூரம் பற்றி..
பாளையங்கோட்டை வெள்ளக்கோயில் சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். தொழிலாளி. இவரது மனைவி ராஜகுமாரி (வயது 39).
ரமேஷ்குமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று இரவு ராஜகுமாரி தனது குழந்தைகளுடன் வீட்டிலிருந்தபோது, குடிபோதையில் வந்த ரமேஷ்குமார் அவதூறாகப் பேசி பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர், மனைவியை மாறி மாறி தாக்கியதுடன், வீட்டிலிருந்த அரிவாள் மனையை எடுத்து பின் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
இதில் படுகாயமடைந்து ரத்தம் வழிந்த நிலையில் கீழே விழுந்த ராஜகுமாரியை அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் அவரது தம்பி முருகன் மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதுகுறித்து பாளை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.