FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னையில் ஆங்காங்கே மழை! வெய்யிலிருந்து விடுபட்ட மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெய்யிலிருந்து விடுபட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

15 அக்டோபர் 2026, 12:01 pm IST
கரு மேகக் கூட்டங்கள்
பகிர்:

கடுமையான வெய்யில் காரணமாக எல் நினோ என்ற பெயரைக் கேட்டாலே சென்னை மக்கள் கதிகலங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

புரட்டாசி மாதத்தில் பொன் உருக வெய்யில் காயும், மண் உருக மழை பெய்யும் என்பார்கள். ஆனால், மனிதனே உருகும் அளவுக்கு வெய்யில் அடித்ததே தவிர, ஒரு துளி மழையையும் காணாமல் சென்னை தத்தளித்துக் கொண்டிருந்தது.

மழை, வெள்ளம் போன்றவற்றால் திக்குமுக்காட வேண்டிய நேரத்தில் சென்னை மக்களோ கடும் வெய்யில் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில்தான், நாளை முதல் சென்னையில் மழை பெய்யும் என்று இரண்டு நாள்களுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால், சென்னை மக்களுக்கு என்னவோ நம்பிக்கை வரவில்லை. ஆனால், சொன்னது போல நேற்று அதிகாலையிலேயே மழை பெய்து மண்ணையும் சென்னை மக்களின் மனங்களையும் குளிர வைத்திருந்தது.

சென்னையில் அம்பத்தூர், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்திருந்த நிலையில், இன்றும் பல இடங்களில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

முற்பகல் 11.30 மணிக்கு சென்னையில் அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், நெற்குன்றம், போரூர், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments