அரிசி விலை உயர்வுக்கு இதுதான் காரணம்! அமைச்சர் வெங்கடரமணன்
தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு காரணம் குறித்தும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்...
ஆந்திரம், கர்நாடகத்தில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளது என அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், அரிசி விலை உயரவில்லை என்று சமீபத்தில் கூறியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
Advertisement
Advertisement
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் வெங்கடரமணன்,
"அரிசி, சர்க்கரை, பருப்பு விலை குறைப்பு தொடர்பாக ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும். விலை கண்காணிப்புக் குழுவுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.
அனைத்து கருத்துகளையும் உள்வாங்கி மக்களுக்கு எது தேவையோ அதன்படி இந்த அரசு செயல்படுகிறது.
நான் என்னுடைய வாழ்க்கையே ரேஷன் கடையில்தான் வாழ்ந்திருக்கிறேன். நாங்கள் எல்லாம் அடித்தட்டு மக்கள்தான். அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்.
அரிசி சர்க்கரை பருப்பு என அனைத்து உணவுப் பொருள்களுக்கும் திட்டங்களை வகுத்திருக்கிறோம். 2, 3 நாள்களில் அதுகுறித்து அறிவிக்கப்படும்" என்றார்.
This is the reason for the rise in rice prices: Minister Venkataramanan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.