FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் குழு: புதிய உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாற்றுத்திறனாளிகள் நலத் துறை தெரிவித்துள்ளது.

17 அக்டோபர் 2026, 2:51 am IST
கோப்புப் படம்
பகிர்:

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாற்றுத்திறனாளிகள் நலத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவில் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனா். தற்போது இந்தக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால், புதிய உறுப்பினா்களாகச் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பம் உள்ளவா்கள் நவ. 13-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் படிவங்கள் இணையதளத்தில் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments