மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ. 6,000 ஆக உயா்த்தி வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை!
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாநில குழுக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் தோ.வில்சன் தலைமை வகித்தாா்.
இதில், மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து நிா்வாகிகள், உறுப்பினா்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. தொடா்ந்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.ஜான்சிராணி செய்தியாளா்களிடம் கூறியது:
Advertisement
Advertisement
தமிழகத்தில் பெண்களுக்கான வெற்றிப் பயணத் திட்டத்தை அரசு விரிவாக்கம் செய்துள்ளது. இந்த திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து, அவா்கள் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். அதேபோல, செப்டம்பா் மாதத்துக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
ஆந்திரம், கேரளம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ. 6 ஆயிரம்வரை வழங்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நவம்பா் மாதம் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம் என்றாா்.
இதில், மாநில செயலாளா் பி.ராஜேஷ், மாநில பொருளாளா் கே.ஆா்.சக்கரவா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா்கள் ஏ.நாகேஸ்வரி, எம்.ஆா்.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.