FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?’ - உதயநிதி ஸ்டாலின்

‘கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?’ என்று முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி.

9 வினாடிகள் முன்பு
முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் - (கோப்புப் படம்)
பகிர்:

‘கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?’ என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகப்பட்டினத்தில் திருப்பூண்டியைச் சேர்ந்த வழக்குரைஞரும் தவெக நிர்வாகியுமான பூபாலன் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு உளவுத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பூபாலன் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்த பூபாலன், தவெகவின் கண்ணியம், நற்பெயருக்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற தவெக நிர்வாகி பூபாலனை மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

‘முதல்வர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு’ என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், ‘முதல்வர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு’ என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்? ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?

ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன டம்மி முதல்வர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?

இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசின் தேசிய புலாய்வு முகமை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

"Is 'letting it slip through while just standing by and watching' the hallmark of your drug eradication efforts?" asked Leader of the Opposition Udhayanidhi Stalin, addressing Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments