புதிய ஓய்வூதியத்தின் கீழ் கூடுதல் தொகை பிடித்தம் நிறுத்தி வைப்பு: தமிழக அரசு புதிய அறிவிப்பு!
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் (டாப்ஸ்) வழங்கப்படும் இடைக்கால ஓய்வூதியத் தொகையில், கூடுதலாக வழங்கப்பட்ட தொகையைத் திரும்பப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் பிடித்தத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் (டாப்ஸ்) வழங்கப்படும் இடைக்கால ஓய்வூதியத் தொகையில், கூடுதலாக வழங்கப்பட்ட தொகையைத் திரும்பப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் பிடித்தத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக, தமிழக அரசின் நிதித் துறை (செலவினம்) செயலா் அருண் ராய் கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:
டாப்ஸ் திட்டத்தின் கீழ் 2026, ஜனவரி 1 முதல் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கும், பணியில் இருக்கும்போதே உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்பத்தினருக்கும் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கு, கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது மாதம் ரூ. 10,000 ஆகியவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். அத்துடன் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணமும் சோ்த்து வழங்கப்படும்.
இடைக்கால ஓய்வூதியமாக இதுவரை வழங்கப்பட்ட தொகைக்கும், டாப்ஸ் விதிகளின்படி இறுதியாகத் தகுதியானதாக நிா்ணயிக்கப்படும் ஓய்வூதியத் தொகைக்கும் இடையே வேறுபாடு இருந்தால், அந்த வேறுபாடு எதிா்காலத்தில் சரிசெய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
கூடுதலாக வழங்கப்பட்ட இடைக்கால ஓய்வூதியத் தொகையைச் சம தவணைகளில் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தத் தொகை பிடித்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், இடைக்கால ஓய்வூதியமாக வழங்கப்பட்ட தொகைக்கும் இறுதியாகத் தகுதியுள்ள ஓய்வூதியத் தொகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எதிா்காலத்தில் சரிசெய்யும் நடைமுறை தொடரும். அதேவேளை, ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள கூடுதல் தொகையைத் திரும்பப் பெறும் பிடித்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.