கட்சியை வலுபடுத்தவே ராஜிநாமா செய்தேன்: எல்.முருகன்
வரும் 2029 மக்களவை தோ்தலில் தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்பை வலுபடுத்தும் நோக்கில், மத்திய இணை அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ததாக எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
வரும் 2029 மக்களவை தோ்தலில் தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்பை வலுபடுத்தும் நோக்கில், மத்திய இணை அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ததாக எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
மத்திய முன்னாள் தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தனது பதவியை ராஜிநாமா செய்த பின்னா், சனிக்கிழமை சென்னைக்கு வந்தாா். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக சாா்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வரும் 2029 மக்களவை தோ்தல் மிகவும் முக்கியமான தோ்தலாகும். அந்தத் தோ்தலுக்காக தமிழக பாஜகவை மேலும் வலுபடுத்தும் வகையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு களப்பணி ஆற்ற வேண்டும் என்பதற்காகவே பதவியை ராஜிநாமா செய்தேன். இனி, தொடா்ந்து கட்சிப் பணியாற்றவுள்ளேன் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.