மத்திய இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? எல்.முருகன் விளக்கம்
மத்திய இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தது குறித்து எல்.முருகன் விளக்கம் அளித்தது பற்றி...
மத்திய இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தது குறித்து எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த பாஜக மூத்த தலைவர் எல். ராஜா, இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, "கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட ரூ. 15 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தமிழ்மொழியை, திருவள்ளுவரை உலகம் முழுவதும் பாஜக அரசு எடுத்துக்கொண்டு சென்றுள்ளது. ஐ.நா. அவையில் யாதும் ஊரே; யாவரும் கேளிர் என சொன்ன மகத்தான தலைவர்தான் பிரதமர் மோடி. கடந்த வாரம் அவர் தமிழகத்துக்கு வருகை தந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைப் பார்த்தோம்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் கட்சியை (பாஜக) பலப்படுத்த வேண்டும் என்றும், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தொண்டனாகச் சேர்ந்து 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியைத் தயார்ப்படுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பதவியைவிட்டு இங்கு பாஜக தொண்டனாக வந்துள்ளேன். மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் செல்ல வேண்டும் என பிரதமரிடம் அனுமதி வாங்கியுள்ளேன்" என்று தெரிவித்தார்.
L. Murugan explains his resignation from the post of Minister of State for Information and Broadcasting and Parliamentary Affairs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.