FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுகவின் 55ஆவது தொடக்க நாள் விழாவையொட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி பற்றி....

17 அக்டோபர் 2026, 3:52 pm IST
செல்லூர் ராஜூ
பகிர்:

விஜய்யை விட யோகிபாபுவுக்கு அதிக கூட்டம் வரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 55ஆவது தொடக்க நாள் விழாவையொட்டி மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செய்த பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டி:

தவெக கட்சி நிர்வாகியிடமிருந்து இத்தனை கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனது கட்சி நிர்வாகி என்பதால் தவெக அரசு, அவரை முதலில் விட்டுவிட்டது. மத்திய புலனாய்வுத் துறை விசாரணையில்தான் இப்போது இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. இது ஒரு சாம்பிள் மட்டுமே, இதே போல நிறைய இருக்கும்.

Advertisement

Advertisement

எம்.ஜி.ஆரின் தொண்டர்களை அழைப்பதற்கு தவெக-க்கு தகுதி கிடையாது. மார்க்கெட்டில் தவெக விலை போகாததால்தான், அதிமுகவை வைத்து தங்களை வளர்க்க பார்க்கிறார்கள்.

உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிமுகவில் தான் உள்ளனர். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.

தவெக - பட்டாம்பூச்சிகளின் சாயம் வெளுத்து விடும். யோகி பாபு வருகிறார் என்று சொன்னால் கூட அவ்வளவு கூட்டம் வரும். விஜய்க்கு கூடும் கூட்டத்தை விட அதிகமாக வரும்.

மெத்தப்பட்டமைன் விவகாரத்தில் தமிழக காவல் துறைக்கு களங்கம் ஏற்படும் வகையில் தவெக நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர்.

ரூ.35க்கு மின்சாரம் வாங்குவதில் இருந்தே இவர்கள் எவ்வளவு நிர்வாக திறனற்றவர்கள் எனத் தெரிகிறது. நிர்வாக திறனில் பூஜ்யமாக உள்ளது தவெக அரசு. அதிமுகவை இழிவாக பேசுவதை முதல்வர் விஜய் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதிமுக ஒரு ஆலமரம். உதிரும் சில இலைகளை பற்றி எங்களுக்கு கவலையில்லை என்று தெரிவித்தார்.

summary

Former AIADMK Minister Sellur Raju has stated that Yogi Babu will draw a larger crowd than Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments