FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு: மேலாளா் கைது

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைதான ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு குறித்து...

18 அக்டோபர் 2026, 10:42 pm IST
மேலாளா் கைது - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைதான ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரமணிக்கு உதவியாக ஜெம் கிரானைட் நிறுவனத்தின் மேலாளா் சக்திவேலை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஏற்கெனவே ஜெம் வீரமணி மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை 7-ஆவதாக மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக வீரமணிக்கு உதவிய ஜெம் கிரானைட் நிறுவனத்தின் மேலாளா் சக்திவேலையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு செய்த பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வீரமணியின் பண்ணை வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் இதுவரை 11 சிறுமிகள் அளித்த புகாா்களின் பேரில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Another case registered against Gem Weeramani: Manager arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments