FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மிஸ்டர் கிளீன் ஆட்சி! மெத்தபெட்டமைன் நெட்வொர்க்கால் அதிர்ந்துபோன தமிழகம் - ஆர்.பி. உதயகுமார்

மிஸ்டர் கிளீன் ஆட்சியில் மெத்தபெட்டமைன் கடத்தல் நெட்வொர்க்கால் தமிழகம் அதிர்ந்துபோயிருப்பதாக ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

ஆர்.பி. உதயகுமார்
பகிர்:

தமிழ்நாட்டில், மெத்தபெட்டமைன் கடத்தல் நெட்வொர்க் இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் வரை இந்த வலைப்பின்னல் பறந்து விரிந்திருப்பதை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறது அன்னை தமிழகம் என்று முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கூறியிருக்கிறார்.

மேலும், முதல்வர் விஜய் மிஸ்டர் க்ளீன் ஆட்சி என்று உத்தரவு தந்தார், தற்பொழுது ரூ.100 கோடியில் போதை பொருள் வழக்கில் தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே கட்டமைத்திருக்கிறது தவெக அரசு, சமூக வலைதளங்களின் வதந்திகளை மட்டும் வைத்து, அரசு அமைந்திருக்கிறது.

Advertisement

Advertisement

பேரிடர் காலங்களிலே ரீல்ஸை முதலீடாக வைத்து, ரியலை பின்னுக்கு தள்ளிவிட்டால், மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தவெக ஆட்சி, தூய ஆட்சி, மிஸ்டர் கிளீன் ஆட்சி என்றெல்லாம் உத்தரவாதம் தந்தார் முதல்வர் விஜய், தற்போது இந்த 5 மாத காலத்திலே 100 கோடி ரூபாய் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக கட்சியின் செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம், பெரும் அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

பூபாலனுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருப்பதை கண்டறிந்திருக்கும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் வரை இந்த வலைப்பின்னல் பறந்து விரிந்திருப்பதை அறிந்து, அதிர்ந்து போயிருக்கிறது அன்னை தமிழகம்.

இது மட்டுமா? இன்னும் தவெக அரசில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் கருத்து கூறும்போது, நீதிபதி சஞ்சய் குமார், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார், தமிழகத்தைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியதாக தவெகவினர் இணையதளத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

முதல்வர் ஜோசப் விஜய் தாராபுரத்திலே பிரச்சாரம் செய்தபோது, அந்தக் கூட்டத்தில் அதை முன்மொழிந்து, தவெக அமைச்சர் அருண்ராஜ், உச்ச நீதிமன்றமே தமிழக அரசை பாராட்டி இருப்பதாக குறிப்பிட்டு பேசினார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் சம்பந்தமான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சஞ்சய் குமார், உங்களின் முதல்வர் வேகமாக செயல்பட நினைக்கிறாரே, நீங்கள் ஏன் வழக்கை ஒத்திவைக்க கேட்கிறீர்கள்?" என்றுதான் நான் அன்றைக்கு சொன்னேன். ஆனால் அதைத் திரித்து, முதல்வர் விஜயைப் புகழ்ந்ததாக தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களிலே வைரலாக்கி விட்டீர்கள். இந்த நிலையிலே செங்கோட்டையனின் தேர்தல் தொடர்பான வழக்கை நான் விசாரிப்பது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. எனவே இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கிறேன்" என்று கூறி, அந்த வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.

நீதிபதி சஞ்சய் குமார் கருத்தும், தவெக அரசின் சமூக வலைதளங்களில் அதுபற்றி வெளியான பதிவும், எப்படி உண்மையை அடித்தளமாக வைத்திருக்கிறது என்பதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த கருத்தே சான்றாக இருக்கிறது.

அத்தனையும் பொய். உண்மை என்பது எதுவுமே இல்லை, சாத்தியம் என்பது எதுவுமே இல்லை. அதற்கான முயற்சி என்பதும் எதுவும் இல்லை. ஆக, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே கட்டமைத்திருக்கிற ஒரு தவெக அரசு, சமூக வலைதளங்களின் வதந்திகளை மட்டும் வைத்து, இந்த அரசு அமைந்திருக்கிறது.

இந்த சமூகத்தில என்ன மாதிரியான தாக்கங்களை எல்லாம் ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு, இந்த சம்பவத்தை நாம் சாட்சியாக எடுத்துக்கொண்டாலும், இன்றைக்கு இவையெல்லாம் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், இப்போது இதைத் தொடர்ந்து அவர்கள் செய்து வருகிறபோது, இப்போது மக்களுக்கு என்ன அச்சம் ஏற்படுகிறது என்றால், மழைக்காலத்திலும் இதுபோன்ற ரீல்ஸ் போட்டு உண்மையை பின்தள்ளிவிடுவார்களோ என்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Mr. Clean governance! Tamil Nadu left in shock by a methamphetamine network – R.B. Udhayakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments