அணைக்கட்டில் பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 2 பெண்கள் பலி
அணைக்கட்டு பகுதியில் நடந்த பட்டாசு கிடங்கு தீ விபத்தில் இரண்டு பெண்கள் பலியானது தொடர்பாக...
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடந்த பட்டாசு கிடங்கு தீ விபத்தில் இரண்டு பெண்கள் பலியாகினர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அப்புகல் சாலையில் ஹரி பிரசாத் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி (41), சங்கீதா ஆகிய இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்து பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அணைக்கட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
Advertisement
Advertisement
இந்த விபத்துக்கு குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணைய தள முகவரியைப் பார்க்கவும்.
Two women killed in firecracker warehouse fire
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.