FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது பற்றி...

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.... - IMD
பகிர்:

வங்கக் கடலில் இன்று (அக். 23) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

இது நாளை (அக். 24) இது தாழ்வு மண்டலமாகவும் நாளை மறுநாள் (அக். 25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற அக். 26 ஆம் மேற்கு - மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவானால் வங்கதேசம் பரிந்துரைத்துள்ள 'அர்னாப்' என்ற பெயர் சூட்டப்படும்.

summary

new low-pressure area has formed in the Bay of Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments