FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது குறித்து...

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - பிரதிப் படம்
பகிர்:

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான நிகோபார் தீவுகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவானது.

Advertisement

Advertisement

இது சனிக்கிழமை (நவ.14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவ.15-இல் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

தாழ்வுப் பகுதியால் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நவ. 16 வரையில் பலத்த காற்று வீசும். கடலில் சூறைக்காற்று அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இது, மேலும் வலுப்பெற்று நவ. 19 முதல் நவ. 25-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புயலாக உருவாகும் பட்சத்தில், புயலுக்கு ஈரான் பரிந்துரைத்துள்ள அக்வான் என பெயரிடப்படும். மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக் கடலில் உருவாகும் 3-ஆவது புயலாகவும் அக்வான் அமையும்.

summary

A low-pressure area has formed over the southeast Bay of Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.