ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்!
ஆசிய பாரா விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் பெறவிருக்கும் ஊக்கத்தொகை பற்றி...
ஆசிய பாரா விளையாட்டில் பாட்மின்டனில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் (24 வயது) ஒரு தங்கம், இரண்டு வெள்ளி வென்றதால், அவருக்கு ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையாக கிடைக்கவிருக்கிறது.
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்தப் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் இரட்டை வெள்ளி, ஒரு தங்கம் வென்றுள்ளார்.
Advertisement
Advertisement
மகளிர் ஒற்றையர் பிரிவிலும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் துளசிமதி முருகேசன் வெள்ளி வென்றுள்ளார். ஒவ்வொரு வெள்ளிப் பதக்கத்துக்கும் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையாக தமிழக அரசினால் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இன்று காலையில் முதல் பதக்கமாக வெள்ளி வென்றதுக்கு துளசிமதிக்கு ரூ.50 லட்சம் அறிவிக்கப்பட்டது.
தற்போது, கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெள்ளியும், மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கமும் வென்றுள்ளதால் இதற்கான ஊக்கத்தொகையும் தமிழக அரசினால் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதன்மூலம், மொத்தமாக துளசிமதிக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் ஊக்கத் தொகையாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்கள் இவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு இடது கையில் குறைபாடு உடன் பிறந்தார். இதனால், அவருக்கு கையில் 30 சதவிகித நெகிழ்வு மற்றும் இயக்கத்தில் தடை ஏற்படுமென்பதும் நினைவுகூரத்தக்கது.
Hat-trick medal: Thulasimathi Murugesan to receive Rs. 1. 75 crore incentive from Tamil Nadu government!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.