FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு வழக்கு: அக். 26-இல் தீா்ப்பு

நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு வழக்கு: அக். 26-இல் தீா்ப்பு

24 அக்டோபர் 2026, 1:15 am
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு திங்கள்கிழமை (அக். 26) தீா்ப்பளிக்கிறது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப் பணம் கைமாறியுள்ளதாக, தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் ஊழல் வழக்குப் பதிவு செய்யக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. தங்கள் தரப்பு கருத்தைக் கேட்காமல், பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை (அக். 26) தீா்ப்பளிக்க உள்ளது.

summary

Municipal Administration, Drinking Water Supply Department Recruitment Irregularity Case: Decision on Oct. 26

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments