FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை!

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா வழக்கில் இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது பற்றி...

9 அக்டோபர் 2026, 11:29 am IST
சென்னை உயர்நீதிமன்றம் - (கோப்புப் படம்)
பகிர்:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விடுப்பு எடுத்ததன் காரணமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்த வழக்கில் இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சோ்ந்த 6 எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவா் எம்.எல். ரவி ஆகியோா் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமா்வு வெள்ளிக்கிழமை காலை தீா்ப்பளிக்கவுள்ளதாக பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி இன்று விடுப்பு எடுத்ததால் இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற அக். 12 ஆம் தேதி திங்கள்கிழமைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல், நகராட்சி நிா்வாகம் - குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு தொடா்பான வழக்குகளிலும் இன்று தலைமை நீதிபதி அமர்வு வழங்கவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

summary

No verdict today in the AIADMK MLAs' resignation case!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments