FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அர்னாப் புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்? சென்னையை தாக்குமா?

அர்னாப் புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும் உள்ளிட்ட விவரங்கள் பற்றி..

அர்னாப் புயல் - imd
பகிர்:

வங்கக் கடலில் இன்று உருவாகியிருக்கும் அர்னாப் புயல் அக். 28ஆம் தேதி ஆந்திர மாநில கடற்கரைப் பகுதியில் அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ‘அா்னாப்’ புயல் உருவாகியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில், புதுக்கோட்டை, சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இன்று புயலாக உருவாகியிருக்கும் அர்னாப் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையைக் கடப்பதால் ஆந்திர மாநிலத்தில் பலத்த சேதம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

Advertisement

Advertisement

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 125 கிலோ மீட்டர் முதல் மணிக்கு 140 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக ஆந்திரத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவே இது தீவிரப் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.

தற்போது இது விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 730 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 820 கி.மீ. தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திலருந்து 920 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

நேற்று எங்கே இருந்தது?

புயல் சின்னம், தென்கிழக்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது.

நேற்று மாலை தெற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, திங்கள்கிழமை காலை மத்திய கிழக்கு அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ‘அா்னாப்’ புயலாக உருவானது.

இந்த புயல் காரணமாக, ஆந்திரத்தின் காக்கிநாடா, அனகபள்ளி, விசாகப்பட்டினம், கோனாசீமா, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் வடக்கு ஆந்திர மாவட்டங்களும் உச்சகட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் செவ்வாய்க்கிழமை காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையக்கூடும்.

ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக புதன்கிழமை (அக். 28) அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்துள்ளார்.

புயல் சின்னம் குறித்து மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் அறிந்து கொள்ளங்கள், செல்போன் எச்சரிக்கை மூலமும் தகவல் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

கடலில் மீன்பிடிக்கச் சென்ற அனைத்து மீன்பிடி படகுகளும் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுளள்னர்.

புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் துத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

summary

Where and when will Cyclone Arnab make landfall? Will it hit Chennai?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments