மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியிலிருந்து, ‘அா்னாப்’ மிக தீவிர புயலின் மையம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடா்சசி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி (அக்.29,30) ஆகிய 2 நாள்கள் லேசான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.31) வரை, அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (அக்.28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: வட தமிழக கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை சூறாவளிக் காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை, மாலை முதல் காற்றின் வேகம் குறைந்து 80 கி.மீ. வேகத்திலும், வியாழக்கிழமை (அக்.29), காற்றின் வேகம் குறைந்து 60 கி.மீ. வேகத்திலும் அதன்பிறகு படிப்படியாக குறையக்கூடும். தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை, சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
மழைப் பதிவு: தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, வேதாரண்யம் பகுதிகளில்-50 மி.மீ. மழை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.