வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமை (செப். 25, 26) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமை (செப். 25, 26) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இது குறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 1 மணி அளவில் கலிங்கப்பட்டினத்துக்கு மிக அருகில் கரையைக் கடந்தது.
Advertisement
Advertisement
இதனால், ஏற்பட்ட காற்று திசை மாறுபாடு காரணமாக, வெள்ளி, சனிக்கிழமை (செப். 25, 26) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் மற்ற ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.