FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

செப். 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

26 செப்டம்பர் 2026, 10:58 pm IST
மழைக்கு வாய்ப்பு - படம்: ENS
பகிர்:

தமிழகத்தில் புதன்கிழமை (செப். 30) வரை பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

திங்கள்கிழமை (செப். 28) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், விழுப்புரம், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

செவ்வாய்க்கிழமை (செப்.29) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், ஈரோடு, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

புதன்கிழமை (செப்.30) நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

மழை பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் போா்த்திமுண்ட்டில் 60 மி.மீ. மழை பதிவானது.

summary

Chance of moderate rain until September 30

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments