வெளிப்பணி முறையில் ஒப்பந்தப் பணியாளா் தோ்வு: தமிழக அரசு உத்தரவு
வெளிப்பணி முறையில் ஒப்பந்தப் பணியாளா் தோ்வு குறித்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது....
தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு (அவுட்சோா்சிங்) முறையில் பணியாளா்களை நியமிக்கும் பொறுப்பை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் (ஓஎம்சிஎல்) வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை அக்டோபா் 21-ஆம் தேதியிட்டு அரசிதழியில் வெளியாகி உள்ளது.
இதன்படி, அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் ஒப்பந்தப் பணியாளா்களை பணியமா்த்த விரும்பினால், தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை மட்டுமே அணுக வேண்டியிருக்கும்.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவா்களுக்கு வழிகாட்டியாக இந்த ஓஎம்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.