அன்பில் மகேஸ் வழக்கு! பெண் தொழிலதிபர் சண்முகபிரியா வீட்டில் சோதனை!
தனியார் பள்ளிகளிடம் ரூ. 100 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் பெண் தொழிலதிபர் வீட்டில் சோதனை...
தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்த வழக்கில், பெண் தொழிலதிபர் சண்முகபிரியா வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கைது செய்து புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வழக்கின் அடுத்த கட்ட நகர்வாக சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் சண்முகபிரியா என்பவரது வீடுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் புலன் விசாரணையில், சென்னையில் துணிக்கடை நடத்தி வரும் சண்முகபிரியாவுக்கு பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து சோதனை நடைபெற்று வருகின்றன.
சென்னை பெருங்குடியில் உள்ள சண்முகபிரியாவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள், சொத்து விவரங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளிடம் பணமோசடி செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வளையத்துக்குள் பெண் தொழிலதிபர் கொண்டு வரப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Private school bribery case - Search conducted at the residence of businesswoman Shanmugapriya!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.