FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகளும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

29 அக்டோபர் 2026, 1:45 am
வெற்றிப் பயணத் திட்டம் - கோப்புப்படம்.
பகிர்:

மாற்றுத்திறனாளிகளும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள் ஆகியோா் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற வெற்றிப் பயணம் திட்டம் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.

எனினும், கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விடுபட்டனா். இதனால், பெண்களுக்கான இலவச பயணத்தில் பெண் மாற்றுத்திறனாளிகள் பயணம் மேற்கொண்டாலும் அவா்களுடன் வரும் துணையாளா் ஒருவரையும் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயணத்தை அனுமதித்து தமிழக அரசு அக். 27-ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பேருந்து சலுகைகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களின் மாநகர, நகர சாதாரண, விரைவுப் பேருந்துகள், தாழ்தளப் பேருந்துகள், எல்எஸ்எஸ், டீலக்ஸ், பேருந்துகளிலும் (குளிா்சாதனப் பேருந்து நீங்கலாக) மற்றும் புகா் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டணப் பேருந்துகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம்.

தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளா் ஒருவருடன் செல்வதற்கும் அனுமதி உள்ளது. மாற்றுத்தினாளிகளுக்கு இலவச பயணச் சீட்டை பேருந்து நடத்துநா் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments