விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்தல்: டிஜிபிக்கு பேராசிரியர் கலையரசன் கடிதம்
தனது குரலை ஒடுக்கவே இத்தகைய சட்டவிரோத செயல் அரங்கேற்றப்பட்டதாக கலையரசன் குற்றச்சாட்டியிருப்பது குறித்து...
சென்னை: பல்லாவரம் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. ஜே. காமாட்சி குறித்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட அவதூறு கருத்து தொடர்பாக, தன்னைத் தவறாக அடையாளம் கண்டு விசாரணை என்ற பெயரில் தாம்பரம் போலீசார் தன்னை துன்புறுத்தியதாகக் கூறி, தமிழ்நாடு காவல் துறைத் தலைவரிடம்(டிஜிபி) பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் புகார் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய பேராசிரியராக பணியாற்றி வரும் பொருளாதார நிபுரணர் கலையரசன் "திராவிட மாடல்" என்ற புத்தகத்தை எழுதியவர்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை அவரது வீட்டில் இருந்து சீருடை இல்லாத போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்தியதாகக் கூறி, தமிழ்நாடு காவல் துறை தலைவருக்கு பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் புகார் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டில் உறக்கத்தில் இருந்தபோது, சீருடை இல்லாத சில காவலர்கள் வீட்டின் கதவைத் தட்டி தனது பெயரை கேட்டதாகவும், பல்லாவரம் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் ஜே. காமாட்சி தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் யாரோ அவதூறான கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பம்மலில் உள்ள டி4 சங்கர் நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை தன்னிடம் கூறியதாகப் பேராசிரியர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
எந்த முறையான ஆவணோ, முதல் தகவல் அறிக்கை நகலையோ காட்டாமல், அதிகாலை நேரத்தில் இரவு உடையில் வலுக்கட்டாயமாக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு குற்றவாளியை போல நடத்தப்பட்டேன்.
போலீஸ் வாகனத்திற்கு பதிலாக வாடகை காரில் வந்த போலீசார், எனது செல்போனை பறிமுதல் செய்தனர். இருப்பினும், பலமுறை கோரிய பிறகு, தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க சில நிமிடங்கள் மட்டும் அலைபேசியைத் திருப்பித் தந்துள்ளனர்.
பின்னர், தனது புகைப்படத்துடன் கூடிய போலிக் கணக்கில் இருந்து அவதூறுப் பதிவு இடம்பெற்றிருந்ததை காவலர்கள் காட்டியதாகவும், அதில் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் பயனர் பெயர் வேறாக இருந்தது. அந்த எம்.எல்.ஏ-வை தனக்குத் தெரியாது என்றும், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும் கலையரசன் மறுத்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தான் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தபோது, அங்கிருந்து தனது புகைப்படத்தை எடுத்து, இந்த போலியான கணக்கை உருவாக்கியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறினேன்.
முதலில் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய காவலர்கள், பல்லாவரம் அருகே வாகனத்தை நிறுத்தி சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர்கள் உயர் அதிகாரிகளுடன் பலமுறை போனில் பேசிக் கொண்டே இருந்ததாகவும், சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு, தன்னை வீட்டில் இறக்கிவிடுமாறு உத்தரவு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்ததாக கூறியவர், காலை 7.45 மணியளவில் அவரை அவரது இல்லத்தில் இறக்கிவிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக, அந்த இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கடிதம் எழுதி வாங்கிக்கொண்டுள்ளனர். இந்த சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குற்றவாளியைப் போல நடத்தப்பட்டதால் தான் மிகுந்த துன்புறுத்தலுக்கும் அவமானத்திற்கும் உள்ளானதாகக் கூறியுள்ள கலையரசன், இந்த சம்பவம் வெறும் போலிக் கணக்கு பதிவுடன் மட்டும் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும் தன்னைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தவர்கள் மற்றும் தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான கணக்கை உருவாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வெறும் போலிக் கணக்கு பதிவுடன் மட்டும் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும் இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
தனது குரலை ஒடுக்கவே இத்தகைய சட்டவிரோத செயல் அரங்கேற்றப்பட்டதாக கலையரசன் குற்றச்சாட்டியுள்ளார்.
Kalaiyarasan said he felt harassed and humiliated by the incident and sought action against those responsible for the alleged detention and impersonation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.