செங்கல்பட்டு அருகே மரகத முருகர் சிலை திருட்டு: போலீசார் விசாரணை
அச்சிறுப்பாக்கம் அருகே மரகத்தினால் ஆன முருகர் சிலை மாயமானது குறித்து போலீசார் விசாரணை குறித்து...
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே மரகத்தினால் ஆன முருகர் சிலை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே பெருங்கருணை கிராமம். இந்த கிராமத்தில் ஆலமரங்களுக்கு இடையில் கனகமலை என அழைக்கப்படும் நடுபழனி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் மேற்கு அடிவாரத்தில் முருகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன முருகர் சிலை உள்ளது.
இந்த நிலையில், இந்த கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள், கோயிலின் பூட்டை உடைத்து கருவறையில் இருந்த 2 அடி உயர மரகதத்தினால் ஆன முருகர் சிலையை திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து கோயில் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முருகர் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, மர்ம நபர்களால் திருடப்பட்ட சிலையை மதிப்பிடும் பணிகள் நடந்து வருகின்றன. திருடுபோன முருகர் சிலையின் மதிப்பு பல லட்சம் அல்லது கோடிகள் இருக்கும் என கூறப்படுகிறது.
முருகர் கோயிலில் மரகத்தினால் ஆன முருகர் சிலை திருடப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Maragatha Murugar idol stolen near Chengalpattu; police investigating
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.