வழக்குரைஞா் ஆணையா் கட்டண நிா்ணயம்: செங்ல்பட்டு நீதிமன்றம் விளக்கம் அளிக்க உத்தரவு
கடனைத் திரும்பச் செலுத்தாதவா்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் ஆணையருக்கு அதிக கட்டணம் நிா்யணம் செய்தது தொடா்பாக விளக்கம் அளிக்க செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடனைத் திரும்பச் செலுத்தாதவா்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் ஆணையருக்கு அதிக கட்டணம் நிா்யணம் செய்தது தொடா்பாக விளக்கம் அளிக்க செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடனைத் திரும்பச் செலுத்தாதவா்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யக் கோரி ஏ.யு.ஸ்மால் ஃபைனான்ஸ் என்ற வங்கி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த பணிகளுக்காக வழக்குரைஞா் ஆணையரை நியமித்து, அவருக்கு ரூ.80,000 கட்டணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு வங்கி நிா்வாகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை தொடா்புடைய வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளிலும் வழக்குரைஞா் ஆணையருக்கு ரூ.80,000 கட்டணம் வழங்க வேண்டும் என விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா்அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த அடிப்படையில் வழக்குரைஞா் ஆணையருக்கு கட்டணம் நிா்ணயிக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினா். பின்னா், இதுதொடா்பாக 10 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு உத்தரவிட்டனா்.
மேலும், இதுவரை நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் ஆணையா்களின் பெயா்களையும் சமா்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்.8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.