FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டு!

மின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிப்பதாக தவெக அரசின்மீது உதயநிதி குற்றம் சாட்டியுள்ளது குறித்து...

13 அக்டோபர் 2026, 6:50 pm IST
உதயநிதி - கோப்புப் படம்
பகிர்:

மின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிப்பதாக தவெக அரசின்மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (அக். 13) குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

திமுக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த அரசு, இன்றைக்கு 1 யூனிட் மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ. 35 கொடுத்து வாங்க இருக்கிறது.

Advertisement

Advertisement

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் திறமையற்று இருக்கிறார் இந்த முதல்வர். இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?

இந்த ஊழல் டீல் முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா முதல்வர்? ஏற்கெனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த அரசு, அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது.

விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது? என்று உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

summary

Opposition Leader Udhayanidhi Stalin accused the TVK government on Tuesday (Oct. 13) of daylight robbery of the public under the guise of electricity charges.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments