FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பூலித்தேவன் பிறந்த நாளுக்கு முதல்வர் வாழ்த்து!

பூலித்தேவன் பிறந்த நாளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்து குறித்து...

1 செப்டம்பர் 2026, 9:43 am IST
முதல்வர் விஜய் - கோப்புப்படம்
பகிர்:

அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பூலித்தேவன் பிறந்த நாளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதாகவே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளில், அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன்.

Advertisement

Advertisement

அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது இறுதி மூச்சுவரை அஞ்சாது போராடிய அவரது வீரமும், தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.

தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister C. Joseph Vijay has extended his greetings on the birth anniversary of Puli Thevar, who fought against foreign domination.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments