FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து...

1 செப்டம்பர் 2026, 8:24 am IST
சுங்கச் சாவடி - பிரதி படம்
பகிர்:

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி உள்பட 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று(செப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.

வாகனங்களுக்கு ஏற்ப ஒரு வழிப் பயணம் மற்றும் மாதாந்திரக் கட்டணம் ரூ. 5 முதல் ரூ. 735 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜாபாத், சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் வாகன வகையைப் பொறுத்து ரூ. 5 முதல் ரூ. 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

லாரிக்கு ரூ. 380 சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ரூ. 20 வரை உயர்த்தப்பட்டு ரூ. 400 ஆக வசூலிக்கப்படுகிறது. பேருந்துக்கு சுங்கக் கட்டணம் ரூ. 240-லிருந்து ரூ. 250-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒருமுறை பயணிக்கும் லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு தற்போது வசூல் செய்யப்படும் கட்டணத்தில் இருந்து ரூ. 10, ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் லாரி, பேருந்துகளுக்கு தற்போது வசூல் செய்யப்படும் கட்டணத்தில் இருந்து ரூ. 15 உயர்த்தி வசூல் செய்யப்படுகிறது

சுங்கச்சாவடிகளின் கட்டண உயா்வு வாகன ஓட்டிகளை கவலையடையச் செய்துள்ளது.

summary

A toll rate hike has come into effect today (Sept. 1) at more than 25 toll plazas across Tamil Nadu, including Vikravandi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments