FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தவெகவின் 100 நாள் ஆட்சி ஜஸ்ட் பாஸ்! தேமுதிக எம்.பி. சுதீஷ் பேச்சு

தவெகவின் 100 நாள் ஆட்சி ஜஸ்ட் பாஸ் என்று தேமுதிக எம்.பி. சுதீஷ் பேச்சு

22 வினாடிகள் முன்பு
எல்.கே. சுதீஷ்
பகிர்:

வட இந்திய மக்களுக்கு விஜய் யார் என்றே தெரியாது. பிரதமர் ரேசில் மோடியும் ராகுலும் மட்டுமே இருக்கிறார்கள் என்று வேலூரில் தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் சுதீஷ் கூறியுள்ளார்.

மாநிலங்களவை நிதி 5-கோடியை தான் பிறந்த மாவட்டமான வேலூர் மாவட்டத்திற்கு முழுமையாக பயன்படுத்துவது தொடர்பாக வேலூர் ஆட்சியர் லீலா அலெக்ஸ் அவர்களை, மாநிலங்களவை எம்.பி.யும் தேமுதிக பொருளாளருமான சுதீஷ் சந்தித்து ஆலோசனை செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், என்னுடைய மாவட்டத்திற்கு என்னால் முடிந்தவரை உதவி செய்ய வேண்டும் என என்னுடைய நீண்ட நாள் ஆசை. அது கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து இப்ப அந்த நேரம் வந்திருக்கிறது எனக்கு. என்னுடைய முதல் நிதி ரூ. 5 கோடி நான் பயன்படுத்த உள்ளேன். அதன் அடிப்படையில் இன்று ஆட்சியர் என்னை கூப்பிட்டு இருந்தார். அந்த நிதியை வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என ஆலோசனை செய்தோம்.

Advertisement

Advertisement

முக்கியமாக அங்கன்வாடி கட்டடங்கள், கிராமங்களுக்கு பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கு குடிநீர் தொட்டி அமைப்பதற்கு உள்ளிட்டவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

வேலூர் விமான நிலையம் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். 100 ஏக்கர் நிலம் மேலும் கையகப்படுத்த வேண்டி உள்ளது. அதற்காக தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க நேரம் கேட்டுள்ளேன்.

தமிழக முதல்வர் இன்று மேட்டூர் அணை திறப்பதற்காக விமானத்தில் சென்று சாலையில் வரவேற்புக்காக தடுப்புகள் அமைத்து மக்கள் வரிப் பணத்தை வீணடித்தது கண்டிக்கதக்கது. அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்காதது எப்படி என்று தெரியாது. ஆனால் நான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன்.

தமிழக அரசு இன்று டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளித்துள்ளதை பாராட்டுகிறோம். தமிழக அரசுக்கு நன்றி. ஊழியர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதால் வரவேற்கிறேன்.

தமிழகத்தில் தவெக வெற்றி என்பது யாரும் எதிர்பார்க்காதது வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி இருக்கலாம் என எனக்கும் சந்தேகம் உள்ளது.

பிரதமர் வேட்பாளர் ரேசில் மோடியும் ராகுலும்தான் உள்ளனர். விஜய் யார் என்றே வட மாநில மக்களுக்கு தெரியாது. எனவே பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இவர் இருக்கவே வாய்ப்பில்லை.

தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் ஆட்சி என்பது ஜஸ்ட் பாஸ். தட்டுத் தடுமாறி பாஸ் என்று சொல்லலாம்.

சட்டமன்றத்தில் 100 நாட்கள் கடந்த பின்னரும் அந்தந்தத் துறை அமைச்சர்கள் பதில் அளிக்காமல் மூன்று அமைச்சர்கள் மட்டுமே பதில் அளிக்கின்றனர். வரும் காலங்களில் எல்லா துறை அமைச்சர்களும் பதில் அளிக்க வேண்டும். அதை தான் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா சட்டப்பேரவையில் கூறி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments