FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சேலத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலம்! சமையல்காரரிடம் விசாரணை! பெண்ணின் அடையாளம் தெரிந்தது எப்படி?

சேலத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் அடையாளம் தெரிந்தது.

45 வினாடிகள் முன்பு
கொலையானவர் - dps
பகிர்:

சேலத்தில், துண்டு துண்டாக வெட்டப்பட்டு பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் சமையல்காரர் செல்லதுரை என்பவரிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாநகர் அரிசிபாளையம் குணபாலா ராமசாமி தெரு பகுதியில் உள்ள வீட்டில், 8 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம் தண்ணீர் தொட்டியில் மூட்டை கட்டி போடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் கொலை செய்த நபர் யார் என விசாரணை நடைபெற்று வந்தது.

காலை 8 மணிக்கு சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மதியம் 12 மணி வரை கொலை செய்யப்பட்டவர் குறித்தும் கொலை செய்தவர் குறித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில் பிற்பகலில் சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே இருக்கக்கூடிய 2 இளைஞர்கள் மற்றும் ஒரு சமையலர் ஆகியோரை அழைத்து வந்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து சேலம் வடக்கு சரக காவல் துணை ஆணையர் அன்கீத் சிங், சூரமங்கலம் காவல் உதவி ரமணி ராமலட்சுமி, உள்ளிட்ட நான்கு காவல் உதவி ஆணையர்கள், பள்ளபட்டி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் துறையினர் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து சேகரிக்கப்பட்ட தடயங்கள் குறித்து காவல்துறையினரிடம் விளக்கம் அளித்தனர்.

இதனிடையே மாலை 4:30 மணியளவில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் தங்கமணி (வயது 50 ) என்றும் இவர் சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் கணபதி என பச்சை குத்தப்பட்டு இருந்தது. இது குறித்து வெளியான தகவலை அறிந்த பெண்ணின் கணவர் ஜீவானந்தம் மற்றும் அவரது மகள் உள்ளிட்ட உறவினர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையம் வந்து இறந்தது கிடந்தது தங்கமணி என அடையாளம் காட்டினார்.

தங்கமணி சில வருடங்களாக சேலம், அஸ்தம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் வீட்டு வேலைக்குச் சென்று வந்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சங்கர் நகர் பகுதியில் வசிக்கும் டாக்டர் ஒருவர் வீட்டில் தங்கமணி வேலை பார்த்து வந்துள்ளார். இதன் பின்னர் அவர் மாயமாகி உள்ளார்.

28ஆம் தேதி தங்கமணி மாயமானதாக, ஜீவானந்தம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவரான சமையல்காரர் செல்லதுரை என்பவரின் தங்கையும் இறந்து போன தங்கமணியும் நண்பர்களாக இருந்தது தெரிய வந்துள்ளது.

சமையல்காரரின் தங்கை செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் எங்கே உள்ளார் என்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த சமையல்காரரின் தங்கை வீட்டு வேலைக்குச் சென்று வருவதாகவும் அப்போது சங்கர் நகரில் வீட்டு வேலைக்கு வந்து செல்லும் தங்கமணி பழக்கம் ஏற்பட்டிருக்கலாமா? இந்த உறவுப் பெண் மூலம் சமையல்காரருக்கும் தங்கமணிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், சமையல்காரர் தங்கமணியை அழைத்து வந்து தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினாரா? இதில் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் கொலை செய்தாரா? தங்கமணிக்கும் சமையல்காரருக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதும் ஏற்பட்டு அதில் தகராறு ஏற்பட்டு அதில் ஆத்திரம் அடைந்து தங்கமணி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சமையல்காரர் செல்லதுரையிடம் சுமார் 8 மணி நேரமாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

summary

Woman's body found chopped into pieces in Salem! Cook questioned! How was the identity established?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments