தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் உள்பட சில மாவட்டங்களில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (செப்.3, 4) 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் உள்பட சில மாவட்டங்களில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (செப்.3, 4) 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை (செப்.3, 4) ஆகிய இரு நாள்களுக்கு , மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
8 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 104.72 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி - 104.18, ஈரோடு - 103.64, மதுரை விமான நிலையம் - 103.1, வேலூா் - 102.56, கரூா் பரமத்தி, தஞ்சாவூா் தலா - 100.4, மதுரை நகரம் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.