FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்!

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்ததைப் பற்றி...

3 செப்டம்பர் 2026, 9:55 am IST
ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் பி.வெங்கட ரமணன் மற்றும் வ.காந்திராஜ்.
பகிர்:

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் பி.வெங்கட ரமணன் மற்றும் வ.காந்திராஜ் ஆகியோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.

தென்மேற்கு பருவமழை குறைவாக உள்ள நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. 

இதையடுத்து தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக ஆயிரம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மத்திய அரசு சார்பாக மகாராஷ்டிரத்தின் நாசிக் வெங்காய குடோனில் இருந்து பல மாநிலங்களுக்கு வெங்காயத்தை டன் கணக்கில் அனுப்பி வருகிறது. இதன் மூலம் வெங்காயத்தை விலையை குறைத்து ஒரு கிலோ ரூ. 35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், முதற்கட்டமாக நகர்ப்புறத்தில் அமைந்துள்ள 8,233 நியாய விலைக் கடைகள் மூலம் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெங்காயம் வழங்கப்படவுள்ளது.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள (டி.யு.சி.எஸ். லிட்.) திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை வெங்காய விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கட ரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

summary

Ministers P. Venkata Ramanan and V. Gandhiraj inaugurated the scheme to sell onions at ration shops on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments