FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் பதில்...

3 செப்டம்பர் 2026, 1:42 pm IST
முதல்வர் விஜய் - TN Assembly
பகிர்:

காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை அளிக்கும்போது யாரும் ஓடக் கூடாது என்று முதல்வர் ஜோசப் விஜய் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை - தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் நன்றாக தயாராகி, திங்கள்கிழமை பதிலுரை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் பேசுகையில்,

“உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை விளக்கமாக பதிலளிப்பேன். நான் பேரவையில் இல்லையென்றாலும் அனைத்து கேள்விகளும் எனக்கு வந்துவிடும். தெளிவான பதிலளிப்பேன்.

ஆனால், உங்கள் மூலம் ஒன்றை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நான் பேசும்போது யாரும் ஓடக் கூடாது என சத்தியம் (Promise) செய்யுங்கள்" எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பேரவையிலிருந்து முதல்வர் விஜய் புறப்பட்ட நிலையில்,”கடைசியாக யார் ஓடிப் போனார்கள் என்று அனைவரும் பார்த்திருப்பார்கள். நேரலை செய்தீர்களா எனத் தெரியவில்லை. நானும் 3 நாள்களில் தயாராகி வாருங்கள் என்றுதான் கூறினேன்” என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

summary

No one should leave while I am speaking; Promise to it — Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments