FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்கூபா உடை, துரித மீட்பு ஊர்திகள்: தீயணைப்புத் துறை அறிவிப்புகள்!

தீயணைப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் குறித்து...

3 செப்டம்பர் 2026, 2:16 pm IST
பகிர்:

சட்டப்பேரவையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதிலளித்த முதல்வர் விஜய், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

  • 6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் ரூ. 16 கோடி செலவில் நிறுவப்படும்.

    Advertisement

    Advertisement

  • 10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 131 புதிய குடியிருப்புகள் ரூ. 80 கோடி செலவில் கட்டப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பயிற்சிக் கழகத்தின் (Fire and Rescue Services Academy) இரண்டாம் கட்டப் பணிகள் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்

  • 3 சிப்காட் தொழிற்பூங்காக்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ரூ. 4.59 கோடி செலவில் நிறுவப்படும்

  • 6 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களை ரூ. 12.84 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்

  • 15 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களுக்கு ரூ. 65.90 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்காக 50 நீர்தாங்கி வண்டிகள் (Water Tenders) ரூ. 60 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு புதிதாக 50 துரித மீட்பு ஊர்திகள் (Quick Response Vehicles) ரூ. 17.50 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு புதிதாக இரண்டு வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட ஊர்திகள் (Aerial Ladder Platform vehicles) ரூ. 60 கோடி செலவில் வழங்கப்படும்

  • 3. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் ஸ்கூபா வீரர்கள் பயன்பாட்டிற்கு 50 ஸ்கூபா உடைகள் (Scuba Suits) ரூ. 1 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் உள்ள "Fireman" (தீயணைப்போர்) என்ற பதவியின் பெயர் "Firefighter" (தீயணைப்பு வீரர்) என மாற்றி அழைக்கப்படும்

  • தமிழ்நாடு முதல்வரின் தீயணைப்புப் பணிகள் பதக்கம் பொங்கல் நாளன்று வழங்கப்படும் எண்ணிக்கை மற்றும் படித்தொகை உயர்த்தி வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் முதல் கட்டமாக இரண்டு ஸ்கூபா டைவிங் குழுக்கள் ரூ. 80 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

summary

Chief Minister Vijay announced new initiatives while replying to the debate on the demand for grants for the Fire and Rescue Services Department in the Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments