FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூ. 7,015 கோடியில் சிங்கப்பெண்கள் கடன் திட்டம்... கூட்டுறவுத் துறைக்கு அமைச்சரின் புதிய அறிவிப்புகள்!

கூட்டுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் குறித்து...

அமைச்சர் வ. காந்திராஜ் - படம்: சட்டப்பேரவை
பகிர்:

சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் வ. காந்திராஜ், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் இன்று(ஆக. 20) உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து, அமைச்சர் வ. காந்திராஜ் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

Advertisement

Advertisement

மகளிரைத் தொழில்முனைவோராக்க புதிதாக "சிங்கப்பெண்கள் கடன் திட்டம்" ரூ. 7,015 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும்.

விவசாயிகளுக்கு ரூ. 5000 கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் 9 சதவிகித வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.

கூட்டுறவு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, சந்தைப் பங்கை அதிகரித்து, லாபத்தை உயர்த்த "வெற்றி" என்ற பொதுவான வணிகச் சின்னம் (Logo) அறிமுகப்படுத்தப்படும்.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களும் குறைந்த பட்சம் ஐந்து சேவைகள் வழங்கும் சங்கங்களாக ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

ரூ. 6.90 கோடி மதிப்பீட்டில், 3452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நுண் தானியங்கி சாதனங்கள் (Micro ATM) நிறுவப்படும்.

10,000 நியாய விலைக்கடைகளுக்கு யுபிஐ(UPI) பணப்பரிவர்த்தனை நடைமுறைகள் விரிவுபடுத்தப்படும்.

கூட்டுறவுத்துறையின் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு வலைத்தளம் (Portal) மற்றும் கூட்டுறவு செயலி (Mobile app) உருவாக்கப்படும்.

தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் விவசாயிகளுக்கு, நீண்டகால கடன் வழங்கும் திட்டம் ரூ. 50 கோடி அளவிற்கு மீண்டும் தொடங்கப்படும்.

வேளாண் விளைபொருள் ஈட்டுக் கடன் ரூ. 115 கோடியிலிருந்து ரூ. 300 கோடியாக அதிகரித்து வழங்கப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நெல் உலர்த்தும் கருவியுடன் கூடிய வசதி மையங்கள் (Facilitation centres) நடத்திட கூட்டுறவுத்துறை மூலம் கடன் வழங்கப்படும்.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, முதல்கட்டமாக 100 நியாயவிலைக்கடைகளில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் LED தகவல் பலகைகள் அமைக்கப்படும்.

summary

Minister V. Gandhiraj, while replying to the debate on the demand for grants for the Cooperative Department in the Legislative Assembly, also made new announcements.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments