சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!
ஊரக வளர்ச்சித் துறைக்கு முதல்வர் விஜய் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து...
சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து, முதல்வர் சி. ஜோசப் விஜய் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், பேரவையில் இன்று(ஆக. 19) நடைபெற்றது.
அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
Advertisement
Advertisement
நடப்பாண்டில் சிறப்பாக செயல்படும் 1,000 சுயஉதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் ஊக்கத் தொகையாக "வெற்றிப் பெண்கள் சுய உதவிக் குழு விருது" வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை சர்வதேச சந்தைகளில் சந்தைப்படுத்தும் வகையில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பிரத்யேகமான மின்னணு வணிகத் தளம் உருவாக்கப்படும்.
திருநர்களின் நலனுக்காக ரூ, 3.17 கோடி மதிப்பீட்டில் ஒரு விரிவானத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள 6,800 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 102 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள 13,333 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ. 20 கோடி வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக ரூ. 2 கோடி மதிப்பீட்டில் 'மூலப்பொருள் ஆதரவு வங்கி' அமைக்கப்படும்.
10,000 பள்ளிகள் மற்றும் 1,000 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மனநலம் காத்தல், மது மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி ரூ. 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
50,000 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வேலைவாய்ப்புகளுடன் கூடிய திறன் பயிற்சி ரூ. 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.
Chief Minister C. Joseph Vijay announced new initiatives while replying to the debate on the demand for grants for the Rural Development and Panchayat Raj Department in the Legislative Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.