FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நீதி வேண்டும்!! முதல்வா் பாதுகாப்பு வாகனங்களை மறித்துப் போராட்டம்: 8 போ் கைது

சென்னையில் முதல்வா் பாதுகாப்பு வாகனங்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 8 போ் கைது செய்யப்பட்டது குறித்து...

4 செப்டம்பர் 2026, 12:03 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் முதல்வா் பாதுகாப்பு வாகனங்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 8 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை தலைமைச் செயலகத்துக்கு முதல்வா் சி.ஜோசப் விஜய், நீலாங்கரை வீட்டில் இருந்து வியாழக்கிழமை காலை காரில் வழக்கம்போல புறப்பட்டு வந்து கொண்டிருந்தாா். அவரது காருக்கு முன்பாக காவல் துறையின் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

காவல் துறை வாகனங்கள் தலைமைச் செயலகம் அருகே ராஜாஜி சாலையில் சென்றபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த சிலா், பாதுகாப்பு நின்று கொண்டிருந்த போலீஸாரை தள்ளிவிட்டப்படி பாதுகாப்பு வாகனங்களை மறித்து ‘நீதி வேண்டும், நீதி வேண்டும்’ என்று முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸாா், அனைவரையும் உடனடியாக கைது செய்து, அழைத்துச் சென்றனா்.

இதைப் பாா்த்த முதல்வா் ஜோசப் விஜய், தனது காரை அங்கு நிறுத்தி என்ன நடந்தது என்று விசாரித்துச் சென்றாா். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தண்டையாா்பேட்டை காவல் நிலைய காவலா் ராம்குமாா் காயமடைந்தாா். அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல் நிலையத்தில் இறந்த ஆகாஷ் டெலிசனின் பெற்றோா் ராஜேஷ் கண்ணன், ஆனந்தி, உறவினா் பூவலிங்க ராஜா, ஆகாஷ் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும் அமைப்பைச் சோ்ந்த குபேந்திரன், லெனின், சதீஷ், கண்ணன், நிலவன் என்பது தெரிய வந்தது. 8 பேரையும் போலீஸாா் விசாரணைக்கு பின்னா், எச்சரித்து விடுவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments