FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செப். 9-ல் ஆலோசனைக் கூட்டம்: கூட்டணிக் கட்சிகளை நேரில் அழைத்த அமைச்சர்கள்

தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்திருப்பது குறித்து...

4 செப்டம்பர் 2026, 6:44 pm IST
பெ. சண்முகம் | மு. வீரபாண்டியன் | வைகோ | விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு தவெக நிர்வாகிகளான அமைச்சர்கள் என். ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

தவெக அரசு அமைய ஆதரவு கொடுத்த கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், செப். 9-ல் நடைபெறவுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, சென்னை கோவளத்தில் ஜூலை 1-ல் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்றபோதிலும், இடதுசாரிகள் கட்சிகள் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

summary

Consultative meeting of TVK alliance parties on September 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments