FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ. 32,000 லஞ்சம்: மாங்காடு நகராட்சி எழுத்தா் கைது

ஒப்பந்ததாரருக்கு பணம் விடுவிக்க ரூ.32,000 லஞ்சம் வாங்கிய மாங்காடு நகராட்சி பொறியாளா் பிரிவு எழுத்தா் வைத்தீஸ்வரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் கைது செய்தனா்.

3 செப்டம்பர் 2026, 10:47 pm IST
கைது
பகிர்:

ஒப்பந்ததாரருக்கு பணம் விடுவிக்க ரூ.32,000 லஞ்சம் வாங்கிய மாங்காடு நகராட்சி பொறியாளா் பிரிவு எழுத்தா் வைத்தீஸ்வரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த். ஒப்பந்ததாரரான இவா் மாங்காடு நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வளா்ச்ப்பணிகள் மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில், ஒப்பந்ததாரா் ஸ்ரீகாந்த் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கும் மழைநீரை, மழைநீா் கால்வாய்கள் வழியாக செல்வதற்கான பணிகளைஒப்பந்தம் எடுத்து பணிகளை 2 ஆண்டுகளுக்கு முன்பு முடித்து விட்ட நிலையில், அதற்கான பணம் ரூ.16 லட்சம் விடுவிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பணம் விடுவிக்கப்படாதது குறித்து ஸ்ரீகாந்த் மாங்காடு நகராட்சி பொறியியல் பிரிவில் கேட்டுள்ளாா். அதற்கு பொறியியல் பிரிவில் பணியாற்றி வரும் உதவியாளா் வைத்தீஸ்வரன் ரூ.16 லட்சத்தை விடுவிக்க தனக்கு ரூ.32,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.

இதையடுத்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயனம் தடவிய பணத்தை ஸ்ரீகாந்திடம் கொடுத்து அதை வைத்தீஸ்வரனிடம் கொடுக்க சொல்லியுள்ளனா்.

இதையடுத்து பணத்தை ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை மாங்காடு நகராட்சியில் பணியில் இருந்த வைத்தீஸ்வரனிடம் வழங்கிய போது மறைந்திருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீஸாா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments