FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

7 நாள்களில் 238 புகாா்களுக்கு ‘சிங்கப் பெண்’ படை நடவடிக்கை

தமிழக காவல் துறையின் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினா், தமிழகத்தில் கடந்த ஆக.28 முதல் செப்.3 வரையிலான 7 நாள்களில் 238 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா்.

33 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

தமிழக காவல் துறையின் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினா், தமிழகத்தில் கடந்த ஆக.28 முதல் செப்.3 வரையிலான 7 நாள்களில் 238 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த அதிரடிப் படையினா் அளித்த புகாா்கள், தகவல்களின் அடிப்படையில் 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதேபோல, காணாமல்போன பெண்கள், குழந்தைகள் என 5 போ் மீட்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 4 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பள்ளியை விட்டு நின்ற 61 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,448 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments